Menu
Your Cart

தம்மம் தந்தவன்

தம்மம் தந்தவன்
-5 %
தம்மம் தந்தவன்
விலாஸ் சாரங் (ஆசிரியர்), ஆர்.காளிப்ரஸாத் (தமிழில்), காளிப்ரஸாத் (தமிழில்)
₹247
₹260
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புத்தர் எல்லாவற்றையும் துறந்தவர். வாழ்வின் பொருளை அவருக்கேயுரிய பார்வையில் விளக்கியவர். எதுவுமே இல்லாமல் ஏற்கெனவே வறுமையில் உழன்று கொண்டு இருப்பவர்கள் துறவியாவது எளிது. அதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகம். ஆனால் மன்னரின் மகனாகப் பிறந்த சித்தார்த்தன் எல்லாவற்றையும் துறந்தது எப்படி? அதற்கான காரணங்கள் எவை? என்பதை இந்த நாவல் மிக அற்புதமாக விவரிக்கிறது. புத்தர் தனது இளமைக்காலத்தில் வெளியுலகம் தெரியாமல் வளர்க்கப்பட்டது, அரண்மனைக்குள் சிறை வைக்கப்பட்டவராக இருந்தது, அதையும் மீறி வெளியுலகைக் கண்டு தனது புரிதலுக்கேற்றபடி உலகை விளங்கிக் கொண்டது, புத்தர் துறவியாகிவிடக் கூடாது என்பதற்காக அவருக்கு அவர் தந்தை திருமணம் செய்து வைத்தது, ஒரு குழந்தை பிறந்ததும் இல்வாழ்வைத் துறந்துவிடுவேன் என்று திருமணம் ஆன புதிதில் புத்தர் தனது மனைவியிடம் கூறியது, ஆண் குழந்தை பிறந்தவுடன் இல்லறத்தை விட்டு விலகியது, எட்டு ஆண்டுகள் கழித்து திரும்பவும் கபிலவஸ்துவிற்கு வந்து பிச்சைப் பாத்திரத்துடன் நடந்து வந்தது, அரசனான புத்தரின் தந்தை கோபித்துக் கொண்டது, மனைவி யசோதரா புத்தரைக் கட்டித் தழுவியும் அவர் தன்னிலை மாறாதது என உணர்ச்சி பொங்க புத்தரின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரிக்கும் இந்நாவல், புத்தரின் வாழ்வியல் சிந்தனைகளை வாசகர்களின் மனதில் விதைத்துவிடுகிறது. உயர்ந்த சிந்தனைகளை கவித்துவமான நடையில் பேசும் இந்த நாவல், ஒரு மொழிபெயர்ப்பு என்று தோன்றாதவிதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது சிறப்பு.
Book Details
Book Title தம்மம் தந்தவன் (The Dhamma man)
Author விலாஸ் சாரங்
Translator காளிப்ரஸாத், ஆர்.காளிப்ரஸாத்
ISBN 9788194016267
Publisher நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications)
Pages 208
Published On Jan 2019
Year 2019
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Panuval suggestions

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மராத்தி மற்றும் ஆங்கில மொழி எழுத்தாளரான விலாஸ் சாரங் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல கல்லூரிகளில் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய நூலாசிரியரின் நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கு நேரடித் தொடர்பில்லாத பல்வேறு அனுபவங்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 26 சிறுகதைகளில் இருப்பது..
₹333 ₹350
ஆள்தல் என்றால் அரசு செய்தல், ஆட்கொள்தல், அடக்கியாளுதல், வழங்குதல், கைக்கொள்ளுதல், கையாளுதல் எனப்பல பொருள். அளத்தல் என்றால் அளவிடுதல், மதிப்பிடுதல், ஆராய்ந்தறிதல் என்பன பொருள். ஆழமான தலைப்பு சிறுகதை தொகுப்புக்கு. கதைகளை வாசித்து வரும்போது, தமிழ்ப் படைப்பிலக்கியப் பண்ணைக்கு ஒருவன் போந்தனன் என்பது உற்ச..
₹133 ₹140